புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

தனியார் துறைக்கு ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு உலக வங்கியின் உதவியை தொழில் அமைச்சர் நாடுகின்றார்.

ஊடகங்கள்

தனியார் துறையின் முறைசார் மற்றும் முறைசாரா துறைகளின் பணியாளர்களின் நலன்புரிகளை அதிகரிக்கும் நோக்கில் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமொன்று உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாக இருப்பதால், தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் அத்தகைய திட்டத்திற்கு உலக வங்கியின் ஆதரவை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றார். தொழில் அமைச்சில் இன்று (20) காலை நடைபெற்ற உலக வங்கியின் தூதுக்குழுவுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

 

நாட்டின் தனியார் துறையில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பல வேலை வாய்ப்புகள் கிடைத்த போதிலும், அவர்கள் அரச துறையில் மட்டுமே வேலைகளை விரும்புவதால் அவற்றின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனரொன்று அமைச்சர் உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியிருந்தார். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் நன்மைகளைத் தவிர தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்காத, அரச துறை பணியாளர்களுக்கான வலுவான ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டமே இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் கருத்துத் தெரிவித் திருந்தார்.

 

கோவிட் -19 தொற்றுநோய் போன்ற பேரழிவில் தங்கள் வேலைகளை இழக்கின்ற வேலையாட்களுக்கு ஊசே.நி மற்றும் ஊ.ந.பொ.நிதியத்தின் கீழ் பாதுகாப்பு வலை இல்லாதது தீவிரமானதொரு குறைபாடு என்று குறிப்பிட்ட கௌரவ அமைச்சர், தொழில் அமைச்சு இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான பணியை ஆற்றி வருவதாகக் கூறியிருந்தார்.   எனவே, தனியார் துறையின் முறையான மற்றும் முறைசாரா துறைகளைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் தொழில் பாதுகாப்பைத் உறுதிப்படுத்தி வலுவான ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நிறுவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் கூறினார். இது தொடர்பாக சர்வதேச தொழில் தாபனத்துடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு உலக வங்கியின் ஆதரவையும் கோரியுள்ளார். அமைச்சரின் வேண்டுகோளுக்கு பதிலளித்த உலக வங்கி பிரதிநிதிகள் குழு, பெரும்பாலான வளர்ந்த நாடுகள் ஏற்கனவே தங்கள் சொந்த நாடுகளுக்கு மிகவும் பொருத்தமான ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும், அத்தகைய திட்டம் இலங்கையின் அயல் நாடொன்றான மாலைத்தீவுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித் திருந்தனர்.

 

இலங்கையின் தற்போதைய நிலைமையை முறையாக மதிப்பீடு செய்ததன் பின்னர் இலங்கைக்கு பொருத்தமான திட்டமொன்றை உருவாக்குவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டமொன்றை தாபிப்பதற்கு ஆரம்ப மூலதனமாக நிதி மானியமொன்றை வழங்குமாறு உலக வங்கியிடம் தொழில் அமைச்சர் வேண்டியிருந்தார். இது தொடர்பாக தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சின் வெளி வளங்கள் திணைக்களம் ஆகியவை ஊடாக இது தொடர்பில் உலக வங்கிக்கு உத்தியோகபூர்வ வேண்டுகோளை விடுக்குமாறு தூதுக்குழு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

 

உலக வங்கியின் தூதுக்குழுவில் மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் உலக வங்கியில் மனித அபிவிருத்திக்கான செய்முறைத் தலைவர் திரு. ரெனே லியோன் சோலனோ மற்றும் உலக வங்கியின் சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைகள் பூகோள செய்முறையில் சிரேஷ்ட பொருளாதார வல்லுனரான திரு. தோமஸ் வாக்கர் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். தொழில் அமைச்சின் செயலாளர் திரு.எம்.பி.எஸ்.யு.கே. மாபா பத்திரண அவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்.

Leave a Reply