புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

நடுத்தீர்ப்பு செயல்முறையை தாமதப்படுத்தும் நடுத்தீர்ப்பாளர்கள் கடுமையாகக்  கையாளப்படுவர்

ஊடகங்கள்

1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டமானது, கைத்தொழில் பிணக்கு களுடன் தொடர்புடைய நடுத்தீர்ப்புகூறும் செயன்முறை தொடர்பான கோப்புகளை நீண்ட காலத்திற்கு தம்வசம் வைத்திருப்பதன் மூலம் நடுத்தீர்ப்புக்கூறும் செயன்முறையை தாமதப்படுத்தும் நடுத்தீர்ப்பாளர் களுக்கு எதிராக பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இயலச்செய்யும் வகையில் விரைவில் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் தெரிவிக்கின்றார்.

 

தொழில் அலுவலர்களின் பங்குபற்றுதலுடன் அண்மையில் தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற வைபவ மொன்றின் போதே அமைச்சர்  இக்கருத்தைத் தெரிவித்திருந்தார்.

தொழில்துறை  பிணக்குகளைத் தீர்ப்பதில் ஈடுபட்டுள்ள நடுத்தீர்ப்பாளர்களின் நடத்தை குறித்து தொழில் அமைச்சர் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

 

வேலையாட்களுக்கும் தொழில்தருர்களுக்கும் இடையில் எழுகின்ற பல்வேறு சிக்கலான நிலைமைகளைத் தீர்ப்பதற்கு நடுத்தீர்ப்பு செயன்முறை பயன்படுத்தப்படுவதை அவதானித்து, நடுத்தீர்ப்பினூடாக உழைக்கும் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமெனில், அந்த செயன்முறையை உடனடியாக நிறைவுசெய்யப்பட வேண்டியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். சில நடுத்தீர்ப்பாளர்கள் நடுத்தீர்ப்பு செயல் முறையுடன் தொடர்புடைய கோப்புகளை நீண்ட காலத்திற்கு தம்வசம் வைத்திருப்பதன் விளைவாக   வேலையாட்களுக்கு  பாரிய அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

சில நடுத்தீர்ப்பளிப்பவர்கள் வேண்டுமென்றே நடுத்தீர்ப்புக் கூறும் செயல்முறையை தாமதப்படுத்து வதாகவும், வேறு சில, நடுத்தீர்ப்புடன் தொடர்புடைய இறுதித் தீர்ப்பை வழங்குவதை தாமதப்படுத்து வதாகும் என்றும் அவர் மேலும்  குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply