நிறுவனங்கள்

தொழில் திணைக்களமானது, இந்திய குடிபெயர் தொழிலாளர்களின் நலன்புரிச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஆரம்பத்தில் தாபிக்கப்பட்டிருந்ததுடன், இந்திய குடிபெயர் தொழில் திணைக்களம் என்றழைக்கப்பட்டிருந்தது. 1923 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இந்திய குடிபெயர் தொழில் கட்டளைச்சட்டத்தினை வலுப்படுத்தியமையானது இந்திய குடிபெயர் தொழில் திணைக்களத்தின் தாபனத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

எவ்வாறாயினும், தொழில் அணியின் சுதேச பிரிவுகள் படிப்படியாக விரிவாக்கப்பட்டிருந்ததுடன்,விடாமுயற்சியுடனான உழைப்பு கணக்கெடுக்கத் தக்க சக்தியொன்றாக வந்திருந்தது. இச்சந்தர்ப்பத்தில், காலனித்துவ ஆட்சியாளர், இந்திய குடிபெயர் தொழிலாளர்களின் நலன்புரிச் செயற்பாட்டினை மேற்கொள்வதற்காக வரையறுக்கப்பட்ட அவர்களது எல்லைக்கப்பால் பார்க்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியிருந்தனர். அனைத்து வேலையாட்களின் நலன்புரியினையும், நலனுக்கான நடவடிக்கை களையும் எடுக்க வேண்டியிருந்தது. இதன்படி, இந்திய குடிபெயர் தொழில் திணைக்களமானது, 1931 ஆம் ஆண்டில் பொதுத் திணைக்களமாக இந்திய குடிபெயர் தொழிலாளர்கள் அதேபோன்று பாரம்பரிய தொழிலாளர்கள் என இருவரது நலன்புரிச் செயற்பட்டினையும் உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பிற்குரிய அரச முகவர் என்ற நிலைக்கு மாற்றப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் திணைக்களத்தில் தலைவர் தொழில் கட்டுப்பாட்டாளராக பதவிப்பெயரிடப்பட்டிருந்தார், ஆனால், 1944 ஆம் ஆண்டில் தலைவர், தொழில் ஆணையாளராவும், 2000 ஆம் ஆண்டில் தொழில் ஆணையார் அதிபதியாகவும் பதவிப்பெயர் இடப்பட்டிருந்தார்.

 

எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியாக தொழிலாளரின் பாதுகாப்பிற்கும் நலன்புரிக்குமாக செயற்பாடுகள் பரந்துபட்ட பரப்பளவான செயற்பாடுகளை உள்ளடக்கி நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டளைச் சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அடிப்படையில், இவற்றினை நடைமுறைப் படுத்துவது திணைக்களத்தின் பணி இலக்காக இருந்திருந்தது. இதற்கு மேலதிகமாக, இத்திணைக்களம், வேலையாளரின் கல்வி, மனிதவளங்களைப் பணிக்கமர்த்துதல், தொழில் சந்தைத் தகவல்கள், சமூகக் கலந்துரையாடல் கள் மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் வேலை வாழ்க்கைத் தரம் போன்றவற்றின் முறைப்பாடுகளைக் கண்காணித்தல் போன்ற அத்தகயை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

 

பல்வேறு சேவைகளுக்காக, மேலதிக நேரத்திற்காக அதிகரித்துவரும் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில், இத்திணைக்களத்தின் பதவியினரும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பதவியினரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேற்பட்டதாகும். இந்நிறுவகத்தின் நிருவாகம் பல்வேறு தொழிற்பாடுகள் உரித்தளிக்கப்பட்டுள்ள 17 பிரிவுகளை தலைமை அலுவலகத்தில் கொண்டிருப்பதுடன், பிராந்திய மட்டத்தில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு 11 வலய பிரதி ஆணையாளர்கள் அலுவலகங்கள், 36 மாவட்ட தொழில் அலுவலகங்கள், 12 உபதொழில் அலுவலகங்கள், 9 மாவட்ட தொழிற்சாலை பரிசோதனை பொறியிலாளர் அலுவலகங்களைக் கொண்ட வலையமைப்பொன்றினையும் கொண்டிருக்கின்றது.

பின்வருகின்ற பிரதான செயற்பாடுகள் திணைக்களத்தால் ஆற்றப்படுகின்றன.

  • தொழில் சட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் தொற்றுறைப் பிணக்குகளை தீர்த்தல்.
  • சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
  • தொழில்சார் சுகாதாரத்தை கண்காணித்தல் மற்றும் தொழில்சார் விபத்துக்களைத் தடுத்தல்.
  • ஆட்களின் தொழில்வாய்ப்பினை ஒழுங்குபடுத்துதல், தொழில் துறையில் திட்டமிடல் மற்றும் ஆய்வினை மேற்கொள்ளுதல் மற்றும் தொழில்தருநர் – பணியாளர் உறவினை மேம்படுத்தும் நோக்கில் சமூக அக்கறைதாரர்களுக்கு அறிவூட்டுதல்.
  • தொழில் சந்தை தகவல் சேவை.
  • தொழில்சார் புள்ளிவிபரங்களை சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பரப்புதல்.
  • தொழிற் சங்கங்களை பதிவுசெய்தல்.
  • சர்வதேச தொழில் தாபனத்தின் உறுப்பினராக இலங்கையின் கடப்பாட்டினை நிறைவேற்றுவதற்காக தொழில் அமைச்சுடன் நெருக்கமாக பணியாற்றுதல்.

மேலதிக தகவல்களுக்குதொழில் திணைக்களம்

இந்த நிறுவகம், 2010 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தேசிய தொழில் கற்கைகள் நிறுவகச் சட்டத்தினால் தாபிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவகத்தின் பிரதான வகிபாகம், பல்வேறு பயிற்சி பாடநெறிகளை (டிப்புளோமா மற்றும் சான்றிதழ் பாடநெறிகள்) வழங்குதல், ஆய்வுகளை நடத்துதல், உள்நாட்டு, வௌிநாட்டு தாபனங்களுடன் பணியாற்றுதல், அரச மற்றும் தனியார் திறை வேலையாளர்களின் ஆக்கத்திறனை அதிகரிப்பதற்கான பல்வேறு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுதல் போன்றவையாகும். இந்நிறுவகம் சபையொன்றினால் ஆளப்படுவதுடன், 19 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

தவிசாளர்-திரு.எம் பி டி யூ கே மாபா பத்திரண
பணிப்பாளர் அதிபதி – திருமதி எச் எம் டி என் கே வத்தலியத்த
அலுவலக தொலைபேசி இலக்கம் – 0112786541
பணிப்பாளர் அதிபதியின் தொலைநகல் இலக்கம்– 0112786551
முகவரி – இரண்டாவது தளம், தொழில் செயலகம், நராஹென்பிட்டி, கொழும்பு 05.

 

மேலதிக தகவல்களுக்கு – தேசிய தொழில் கற்கைகள் நிறுவகம்

இந்த நிறுவகம், பணியாளர்களின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக தொழில்தருநர் மற்றும் பணியாளர் களுக்கிடையில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும், உரிய அக்கறைதாரர் களுக்கிடையில் இந்த விடயம் தொடர்பாக பரந்த அறிவினை உருவாக்குவதற் காகவும் தாபிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிறுவகத்தைத் தாபிப்பதற்கான சட்டத்தை வரைதல் நிறைவு செய்யப்பட்டு, பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கல்விசார் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிச் செயற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தொடர்புகொள்வதற்கான தகவல்கள்,
டாக்டர்.(திருமதி) சம்பிக அமரசிங்க
பதில் பணிப்பாளர் அதிபதி
தொலைபேசி: + 94 011-2502683
தொலைநகல்: + 94 011-2585425

 

மேலதிக தகவல்களுக்கு – தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகம்

சிவில் நீதிமன்றமொன்றுக்குரிய தத்துவங்களைக் கொண்டிருக்கின்ற வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளரின் பிரதான வகிபாகம், 2005 ஆம் ஆண்டில் இறுதியாக திருத்தப்பட்டவாறான 1984 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க வேலையாளர் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகும்.

 

இக்கட்டளைச் சட்டத்தின் குறிக்கோள், வேலையிலீடுபட்டிருக்கையில் காயமடைந்த வேலையாளர்களுக்கு அல்லது தொழிலின் தன்மையால் ஏற்படுகின்ற நோயினால் துன்பப்படுகின்ற வேலையாளர்களுக்கும் மற்றும் அத்தகைய காரணிகளால் வேலையாளர் இறந்திருந்தால் அவர்களில் தங்கியிருப்பவர்களுக்கும் தொழில் தருநர்களிடமிருந்து நட்டஈட்டினைப் பெறுவதாகும். மேலுள்ள குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்.

 

வேலையாளரின் நட்டஈட்டுக் கோரிக்கை முறைப்பாடுகளைப் பெறுதல், நட்டஈட்டுக்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பற்றி விசாரணை நடத்துதல் மற்றும் கோரிக்கைளைப் பெறுதல் அல்லது அவற்றை நிராகரித்தல் மூலம் பிரச்சினையைத் தீர்த்தல். தொழில்தருநர்களிடம் நட்டஈட்டுக் கொடுப்பனவு களைப் பெறுதல், அங்கவீனமடைந்தவர்களுக்கான அல்லது இறந்த வேலையாளர்களுக்கான அல்லது அவரில் தங்கியிருப்பவர்களுக்கான நட்ட ஈட்டைச் செலுத்துதல்.

 

கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் தொடர்பான விசாரணைகள் விபத்து இடம்பெற்றுள்ள பிரதேசத்தில் நடத்தப்படுதல் வேண்டும். ஆகவே, நடமாடும் நீதிமன்றங்கள் நாட்டின் பல இடங்களிலும் நடத்தப்படுகின்றது.

 

இறப்பினை ஏற்படுத்தும் விபத்து ஏற்படுமிடத்து, தொழில்தருநர் மூலமான நட்ட ஈட்டுக் கொடுப்பனவு வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளரினூடாக செலுத்தப்படுதல் வேண்டும். ஆனால், இறப்பினை ஏற்படுத்தாத விபத்து ஏற்படுகின்றபோது, அங்கவீனமுற்ற அல்லது நோய்வாய்ப்பட்டுள்ள வேலையாளருக்கு வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளரின் அனுமதியுடன் நேரடியாக செலுத்தப்பட முடியும். நேரடியாக கொடுப்பனவு மேற்கொள்ளப் படுகின்றபோது, தொழில்தருநர் மற்றும் வேலையாளர் இருவரும் இணங்கியே கொடுப்பனவு செலுத்தப்படுகின்றது என்று தெரிவித்து ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட வேண்டு மென்பதுடன், வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளருக்கு அவரது அலுவலகத்தில் பதிவுசெய்வதற்காக அனுப்பப் படுதலும் வேண்டும்.

 

இறந்த வேலையாட்களின் பராயமடையாத பிள்ளைகளின் நன்மைக்காக அவர்களுக்குரிய நட்டஈடு, வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் நம்பிக்கைப் பொறுப்பாளராக குறிப்பிடப்பட்டு தேசிய சேமிப்பு வங்கியில் வைப்புச் செய்யப்படுகின்றது. அவர்களுக்கு 18 வயது பூர்தியாகியதன் பின்னர் உரிய வங்கிப் புத்தகம் அவர்களிடம் கையளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயதினை அடைவதற்கு முன்னர் அந்த பிள்ளைக்கு கல்விக்கு, பராமரிப்புக்கு அல்லது மருத்துவ சிகிச்சைக் உதவி தேவைப்படு கின்றது என்று சாட்சியம் காட்டப்படுகின்றவிடத்து, வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளரின் தற்றுணிபின்பேரில் பராயமடையாத பிள்ளையின் பெயரில் வங்கியில் உள்ள நிலுவைத் தொகையின் வட்டியை பராமரிப்பாளருக்கு வழங்க முடியும்.

தொடர்புகொள்வதற்கான தகவல்கள்,
நிருவாக அலுவலகர்
தொலைபேசி: + 94 011-2599662
தொலைநகல்: + 94 011-2055267

 

மேலதிக தகவல்களுக்கு – வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகம்

தேசிய உற்பத்தித்திறன் செயலகம், உற்பத்தித்திறன்   பற்றிய அறிவினைப் பரப்புவதற்கும்,  உற்பத்தித்திறன் எண்ணக்கரு பற்றிய விழிப்புணர்வினை ஒவ்வொரு பிரசைக்கும் ஏற்படுத்துவதற்கும் முறைகளைப் பயன்படுத்து கின்றது.

 

இலங்கையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதானது, 1966 ஆம் ஆண்டில் ஆசிய உற்பத்தித்திறன் தாபனத்தின் உறுப்புரிமையைப் பெற்றதன் பின்னர், இலங்கை பிரதம அமைச்சர் கௌரவ டட்லி சேனநாயக அவர்களால் அந்த நேரத்தில் இலங்கை அரசாங்கம் சார்பாக ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டிருந்தது. ஆசிய உற்பத்தித் திறன் தாபனத்தின் உறுப்புரிமையைக் கொண்டு, 1968 ஆம் ஆண்டில் கைத்தொழில்கள் அமைச்சின் கீழ் முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் உற்பத்தித்திறன் செயலகமொன்றை இலங்கை  தாபித்திருந்தது. நாடு முழுவதிலும் உற்பத்தித்திறன் பற்றிய அறிவினைப் பரப்பும் வகையில் தேசிய முகாமைத்துவ நிறுவகமாக மேலே சொல்லப்பட்ட முகாமைத்துவ அபவிருத்தி மற்றும் உற்பத்தித்திறன் அலகு மாற்றப்பட்டிருந்தது. பின்னர், தேசிய முகாமைத்துவ நிறுவகம், தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகமாக மறுசீரமைக்கப்பட்டிருந்தது. இந்நிறுவகத்தின் செயற்பரப்பெல்லை, சந்தைப்படுத்தல், தகவல் தொழில் நுட்பம் போன்ற அத்தகைய பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தப் பட்டிருந்தது. கைத்தொழில் அமைச்சு, இலங்கையில் தேசிய உற்பத்தித்திறன் தாபனத்தைப் பலப்படுத்துவதற்கான தேவையை 1994 ஆம் ஆண்டில்  உணர்ந்திருந்தது. ஆகவே, பிறிதான அலகொன்று உருவாக்கப்பட்டு, அது தேசிய  உற்பத்தித்திறன் செயலகம் என்று அழைக்கப்பட்டிருந்தது.

 

செயற்பணி
“சர்வதேச போட்டியை முகம்கொடுப்பதற்கு துறையினை வலுவூட்டுவதன் மூலம் இலங்கையின் ஆக்கத்திறனை அதிகரித்தல் மற்றும் தேசிய அபிவிருத்தியினூடாக எமது மக்களின் உற்பத்தித்திறனை வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.”.

மேலதிக தகவல்களுக்கு – தேசிய உற்பத்தித்திறன் செயலகம்

தொழிலாளர் உறவுகள் மற்றும் மனிதவலு அமைச்சகத்தின் கீழ் தொழில் வாய்ப்பு பிரிவின் மேற்கொண்ட செயல்பாடுகள் தொடர்பான கடமைகளைச் செய்ய. 12.02.2010 திகதியிட்ட இல. 1640/31 வர்த்தமானி அறிவித்தல் மூலம் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் நிறுவப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பின்வரும் பணிகளைச் செய்வதற்கான அதிகாரம் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது.

  1. மனிதவலு மற்றும் தொழில்வாய்ப்புக்கான தேசியக் கொள்கையை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல்.
  2. தொழில் உருவாக்கல் மற்றும் மேம்படுத்தல்.
  3. தொழில் வழிகாட்டல் நிகழ்வு
  4. தொழிலாளர் சந்தை தகவல், சேகரிப்பு பகுப்பாய்வு மற்றும் பரப்புதல் (ஆராய்ச்சி) சந்தை.
  5. தொழில் வலை(PES) வழங்கும் சேவைகள்.

 

 

தொலைநோக்கு – எங்கள் பார்வையாக உருவாக்கல் மற்றும் புதுமையான தொழிலாளர் தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது மற்றும் மாறிவரும் வேலை உலகில் எங்கள் வாடிக்கையாளர்களை வெற்றிபெறச் செய்யும் சேவைகள்.

 

பணி – மனித வள மூலதனத்தை உருவாக்குதலை மேம்படுத்தல் அதே வேளையில் தரமான தொழில் நெறிமுறைக் கலாச்சாரத்தை தொழிலாளரின் திருப்தி, பங்குதாரர்களுக்கான மதிப்பை உருவாக்குதல், மற்றும் போட்டி நன்மைக்காக அதி நவீன மனித வள மூலதனத்தை உருவாக்குதல், ஏற்றுக்கொள்வது மற்றும் ஒருங்கிணைப்பதில் தலைமைத்துவத்தை நிறைவேற்றுதல்.

 

பணிப்பாளர் நாயகம் – திரு.கே.ஜி.எச்.எச்.ஆர்.கிரிஅல்ல

அலுவலக தொலைபேசி இலக்கம் – +94113094117

முகவரி – 9ம் மாடி, செத்சிரிபாய 2ம் நிலை, பத்தரமுல்லை

மேலதிக தகவலுக்கு:https://dome.gov.lk/