அமைச்சு பற்றிய தகவல்கள்

பக்கம் திருத்தப்படுகிறது.

விடயங்களும் தொழிற்பாடுகளும்

  • • உரிய இராஜாங்க அமைச்சுக்கு கொள்கை வழிகாட்டலை வழங்குதல்.
  • • விதித்துரைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களை உறுதிப்படுத்துவதில் தொழில் விடயம் தொடர்பாக கொள்கைகளை வகுத்தமைத்தல்.
  • • தேசிய வரவுசெலவுத்திட்டம், அரச முதலீடு மற்றும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
  • • அரசாங்கத்தல் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய கொள்கைகள் மற்றும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக் கூற்றின் அடிப்படையில் “தனியார் துறையில் பணியாளர்களுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்துவதற்கும் மற்றும் தேர்ச்சியுள்ள வௌிநாட்டு தொழிலணியொன்றினை உருவாக்குவதற்குமாக” கீழே குறிப்பிடப்பட்டுள்ள திணைக்களங்களின், அரச கூட்டுத்தாபனங்களின் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களின் கீழுள்ள விடயங்கள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான கொள்கைகளை, நிகழ்ச்சித்திட்டங்களை மற்றும் கருத்திட்டங்களை வகுத்தமைத்தல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல்.

விசேட முன்னுரிமைகள்

  • • தொழில் துறை விடயப்பரப்பு தொடர்பான அனைத்து சுற்றறிக்கைகள், சட்டங்கள், கட்டளைச்சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகள் ஆகியவற்றை மீளாய்தல் மற்றும் தற்போதைய தேவைகளுக்குப் பெருந்தும் வகையிலும் தொழில் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
  • • ஊழியர் சேமலாப நிதியத்திற்கு மேலதிகமாக, அவர்களின் பின்னைய காலகட்டத்தில் அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தக்கூடிய பங்கீட்டு ஓய்வூதியமொன்றை அறிமுகப்படுத்துதல்.
  • • வேலையாளர்களின் தேர்ச்சியையும் திறன்களையும் செம்மைப்படுத்துகின்ற மற்றும் வேலைத்தலங்களில் உயர் தரத்திலான சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்புப் பொறிமுறை யினையும் பேணுகின்ற அதேவேளை, தொழில்தருநர்களுக்கும் பணியாளர்களுக்குமிடையிலான சிறந்த உறவுமுறையின் அடிப்படையிலமைந்த ஆக்கத்திறனுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை ஊக்குவித்தல்.

மெஹெவர பியெச

அன்றைய பதில் தொழில் அமைச்சராக இருந்த இன்றைய பிரதம அமைச்சர் கௌரவ மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவுக்கு, தொழில் துறைக்கு அதிக பயனுறுதிவாய்ந்த, ஆக்கத்திறனுள்ள வகையில் சேவைகளை வழங்குவதற்கு “மெஹெவர பியெச” கட்டடத்தை நிருமாணிப்பதற்கு 2008 மே 21 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியளித்திருந்தது. இதன்படி, “மெஹெவர பியெச” தொழில் செயலக வளாகத்தில், இலங்கையில் அரசுக்கு சொந்தமான மிக உயர்ந்த கட்டடமாக, இரண்டு நிலக் கீழ் தளங்கள், நிலத்தளம் மற்றும் 32 தளங்களைக் கொண்டு நிருமாணிக்கப்பட்டுள்ளது.

“மெஹெவர பியெச” நிருமாணக் கருத்திட்டம், 7.585 பில்லியன் ரூபா செலவில் 2019 ஆம் ஆண்டில் நிறைவுசெய்யப்பட்டிருந்தது. தற்போது, தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை மற்றும் இறைவரித் திணைக்களம் உள்ளடங்கலான நிறுவனங்கள் “மெஹெவர பியெச” கட்டடத் தொகுதியிலிருந்து அவற்றின் சேவைகளை வழங்கி வருகின்றன.

தொழில் அமைச்சு

தொழில் அமைச்சின் பிரதான குறிக்கோள்கள், இலங்கையின் பகுதி யளவிலான அரச துறை மற்றும் தனியார் துறை பணியாளர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சேவை நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் உற்பத்தியும், தொழில் ஆக்கத்திறனையும் அதிகரிப்பதற்கு தேவைப்பட்டுள்ள தொழிற்றுறை அமைதி மற்றும் தொழில்தருநர்களுக்கும் பணியாளர் களுக்குமிடையிலான உறவுமுறையைத் தாபிக்கின்ற கொள்கைகளை வகுத்தமைத்தல் மற்றும் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல் என்பவையாகும். இந்த அமைச்சிற்கு உரித்தளிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுப் பரப்பானது, உழைக்கும் மக்களின் நலன்புரிக்காக காலத்திற்கு காலம் வகுத்தமைக்கப்படுகின்ற தொழில் சட்டங்கள் மற்றும் சட்டவாக்கங்களுடன் பரந்துபட்டுக் காணப்படுகின்றது. இதன்படி, அமைச்சின் தொலை நோக்கு மற்றும் செயற்பணி பின்வருமாறமைகின்றது.

  • வருட அனுபவம்
  • k

    மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்
  • %

    திருப்தி

தொலைநோக்கு

“திருப்திமிகு உற்பத்திசார் இலங்கையர் தொழிலணி”

செயற்பணி

“தொழிற்றுறை அமைதி, ஐக்கியம், சமூகப் பாதுகாப்பு, வேலையில் உரிமைகள் மற்றும் ஆக்கத்திறனை மேம்படுத்துவதனூடாக சமூக – பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு பங்களித்தல்”

குறிக்கோள்கள்

  • முத்தரப்பு உறவினை வலுப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல்.
  • வேலையில் உலகளாவியரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் நிபந்தனைகளை உறுதிப்படுத்துதல்.
  • சிறுவர் தொழிலை இல்லாதொழித்தல்.
  • பணிக்கமர்த்தப்பட்டுள்ள பெண்களைப் பாதுகாத்தலும் வலுப்படுத்துதலும் மற்றும் பாலின சமபங்கினையும் சமத்துவத்தையும் மேம்படுத்துதல்.
  • உரிய தொழில் சட்ட திருத்தங்களை விரைவுபடுத்துதல்.
  • • பரந்துபட்ட சமூகப் பாதுகாப்பு உபாயத்தை விருத்தி செய்வதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தல்.

முக்கிய விடயப் பரப்புகள்

  • தொழிற்றுறை பாதுகாப்பு மற்றும் ஐக்கியம்.
  • தொழில் நியதிகளும் வலுப்படுத்தலும்.
  • பணிக்கமர்த்தப்பட்டுள்ள பெண்களைப் பாதுகாத்தலும், சிறுவர் தொழிலை இல்லதொழித்தலும்.
  • தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்.
  • சமூகப் பாதுகாப்பு.
  • கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி.

தொடர்புபட்டுள்ள நிறுவனங்களும் சட்டக் கட்டமைப்பும்

திணைக்களங்கள், நியதிச்சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள்

  • தொழில் திணைக்களம்
  • தேசிய தொழிற் கற்கைகள் நிறுவகம்
  • ஊழியர் சேமலாப நிதியம்
  • தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகம்,
  • வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகம்
  • தேசிய உற்பத்தித்திறன் செயலகம்

நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்கள்

  • 1979 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஊழியர்கள் சபைச் சட்டம், 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டம், 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கமர்த்துதல் சட்டம்
  • 1942 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம்
  • 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம்
  • 1939 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டம்.
  • 2009 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகச் சட்டம்.
  • 1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டம்.
  • 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் (தொழில் மற்றும் ஊதிய ஒழுங்குபடுத்தல்) சட்டம்.
  • 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாளர்களின் தொழில் முடிவுறுத்தல் ( விசேட ஏற்பாடுகள்) சட்டம்.
  • 1935 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தொழில் சங்கக் கட்டளைச்சட்டம்
  • 1998 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சிரம வாசனா நிதியச் சட்டம்

தங்களின் தொழில் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான ஆலோசனை பற்றி நாம் கவனம்செலுத்துகின்றோம்

எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்