அம்பாறை சுற்று பங்களா

அம்பாறை சுற்று பங்களா

தொழில் அமைச்சின் புதிதாக கட்டப்பட்ட சுற்று பங்களா தொழில் அமைச்சின் பணியாளர்களுக்கும், அரசச / பகுதியளவிலான அரச நிறுவனங்களில் பணிபுரியும் உங்களுக்குமாக திறந்திருக்கிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

 

அம்பாறையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சுற்று பங்களா, உங்கள் விடுமுறையை அனுபவிப்பதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விலகி, ஒரு வேடிக்கையான வாழ்க்கையை அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன் எங்கள் அமைச்சு இந்த சுற்று பங்களாவை உருவாக்கியுள்ளது. 02 மாடிகள் மற்றும் 06 அறைகள் கொண்ட இந்த பங்களா சுதந்திரமான,அழகான சூழலில் அமைந்துள்ளதுடன், மிகவும் குறைந்த நலன்புரி விலையிலும் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

 

திகாமதுல்ல என்பது மத, தொல்பொருளியல்சார், வரலாற்றுசார் மற்றும் சூழலியல்சார் அழகு கொண்ட நகரமாகும். பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பல இடங்களை சுற்றுலா பங்களாவிலிருந்து எளிதாக அடைய முடியும்.

 

இந்த இடத்திலிருந்து தீகஹவபியா, புத்தங்கல தபோவனய, ராஜகல, குடும்பிகல வனம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களை மிகக் குறுகிய தூரத்தில் எதுவித தடங்கலுமின்றி இன்றி அடைய முடியும்.

 

அம்பாறை சுற்றுலா இல்லத்தை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பங்களா முன்பதிவு விண்ணப்பத்தை எங்களுக்கு info@ labourmin.gov.lk. என்ற மின்னஞ்சல்

 

முகவரியினூடாக மின்னஞ்சல் செய்யவும்:
மேலதிக தகவல்களுக்கு:
தொலைபேசி: +94 (0)112 368098
தொலைநகல்: +94 (0)112 368197
மின்னஞ்சல்: admin@labourmin.gov.lk