கருத்தரங்கு

தொழில் துறை பற்றிய கருத்தரங்கு

இந்த அமைச்சானது, நடைமுறையிலுள்ள பிரச்சினை பற்றிய புலமைசார் கருத்தரங்கொன்றினை வருடாந்தம் ஒழுங்கு செய்வதுடன், அதில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆய்வுப் பத்திரங்களைக் தொகுத்து சஞ்சிகை யொன்றினைப் பிரசுரிக்கின்றது. இதன்படி, 2020 ஆம் ஆண்டில், ‘கோவிட்-19: தொழில் பிரச்சினைகளும் பதிலிறுப்புகளும்’ என்ற கருப்பொருளில் ஆய்வுப் பத்திரங்கள் கோரப்பட்டு, தொழில் துறை பற்றிய ஆழமான அறிவு கொண்ட நிபுணர்கள் குழாமொன்றினால் மீளாயப்பட்டிருந்தது. நாட்டில் நிலவுகின்ற தற்போதைய நிலைமை காரணமாக கருத்தரங்கு நடத்தப்படாமல் சஞ்சிகை மாத்திரம் வௌியிடப்பட்டிருந்தது.