பிரிவுகள்

நிருவாகம் மற்றும் தாபனங்கள் பிரிவானது, நிருவாக அலகு, தாபன அலகு மற்றும் ஊடக அலகு என்ற மூன்று அலகுகளைக் கொண்டிருக்கின்றது.

நிருவாக அலகிற்கு, பொது நிருவாகம், பெறுகைச் செயற்பாடுகள், முகாமைத்துவம், பொதுப் பராமரிப்பு, பயிற்சியளித்தல் மற்றும் அமைச்சினதும், அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களதும் அபிவிருத்தி போன்ற அத்தகைய விடயங்கள் பற்றிய பாரிய பொறுப்பு உரித்தளிக்கப்படு கின்றது. தாபன அலகானது, அமைச்சினதும், கௌரவ தொழில் அமைச்சரது அலுவலகத்தினதும் மனித வள முகாமைத்துவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கின்றது. அத்துடன், இந்த அலகானது, பாராளுமன்ற வினாக்கள், பொது மேன்முறையீட்டுக் குழு, ஆலோசனைக் குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெவ்வேறு வேண்டுகோள்கள் தொடர்பில் பொது மக்களால் அனுப்பப்படுகின்ற பல்வேறுபட்ட கடிதங்கள் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பு வாய்ந்ததாகும். ஊடக அலகானது, இந்த அமைச்சினாலும், அமைச்சின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற நிறுவனங்களாலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றப்பட்டுள்ள முக்கியமான செயற்பாடுகள் பற்றி பொது மக்களுக்கும், ஊடாக நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்துவதற்கு பொறுப்புவாய்ந்ததாகும்.

தொடர்புகொள்வதற்கான தகவல்கள்
திரு.தீபால் சந்திரரத்ன
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிருவாகம்)
தொலைபேசி: + 94 011-2582447
தொலைநகல்: + 94 011-2368200
மின்னஞ்சல்: sas.admin@labourmin.gov.lk.

இந்தப் பிரிவின் பிரதான தொழிற்பாடு பின்வருமாறு.

  • தொழில் கொள்கைகளை வகுத்தமைப்பதில் பங்குபற்றுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் வசதிகளை வழங்குதல்.
  • வெளிநாட்டு உறவுகளில் விசேடமாக சர்வதேச தொழில் தாபனத்தின் உறுப்பு நாடாக இலங்கையின் கடப்பாடுகள் மற்றும் பொறுப்புகளை உறுவதில் மையப் புள்ளியாக தொழிற்படுதல்.
  • தொழில் மற்றும் மனிதவலு விடயம் தொடர்பாக வெளிநாட்டில் நடைபெற்ற கருத்தரங்குகள், பயிற்சியமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் / கற்கைநெறிகளுக்குப் பொருத்தமான அலுவலர்களைப் பங்குபற்றச் செய்வது தொடர்பான அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளுதல்.

இதன்படி, இந்தப் பிரிவு, பின்வருகின்ற விடயப்பரப்புகளில் ஆக்கத்திறனான செயற்பாட்டினை ஆற்றியுள்து:

 • புதிய சட்டங்களை வரைதல் மற்றும் நிறுவனம்சார் மாற்றங்களை மேற்கொள்ளுதல்.
 • தொழில் நிருவாகத்தைப் பலப்படுத்துதல்.
 • சர்வதேச தொழில் தாபனம் மற்றும் ஏனைய வெளிநாட்டு அமைப்புகளுடன் பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல், அத்துடன்
 • அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அலுவலர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியை வழங்குதல்.

தொடர்புகொள்வதற்கான தகவல்கள்,
திரு.பீ.வசந்தன்
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (வெளிநாட்டு உறவுகள்)
தொலைபேசி: + 94 011-2368609
தொலைநகல்: + 94 011-2368609
மின்னஞ்சல்: sas.fr@labourmin.gov.lk

திட்டமிடல், ஆராய்ச்சி, மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பிரதான செயற்பாடுகள் பின்வருமாறு:

 • சீரிய வேலைச் சூழலை உருவாக்குவது தொடர்பாக தொழில் அமைச்சினாலும் அதன் கீழ் வருகின்ற நிறுவனங்களாலும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
 • அமைச்சினதும், அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களதும் வருடாந்த செயற்றிட்டத்தைத் தயாரித்தல்.
 • அமைச்சினதும், அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களதும் முன்னேற்றங்களை கண்காணித்தலும் மீளாய்தலும் மற்றும் அது தொடர்பில் கொள்கைகளை வகுத்தமைப்பதற்கு உதவுதலும்.
 • வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் சமர்ப்பிக்கவேண்டிய அமைச்சினதும், அமைச்சின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற நிறுவனங்களதும் முன்னேற்றங்களை விபரிக்கின்ற முன்னேற்ற அறிக்கையை மூன்று மொழிகளிலும் தயாரித்து பாராளுமன்றத்தில் தயாரித்தல்.
 • அமைச்சினதும், அமைச்சின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற நிறுவனங்களதும் வருடாந்த செயலாற்றுகையை விபரிக்கின்ற அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையை மூன்று மொழிகளிலும் வெளியிடுதல்.
 • தொழிற்றுறை தொடர்பாக காலாண்டுக்கொரு முறை பிரசுரிக்கப்படுகின்ற 1950 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தொழிற் செய்தி மடலை தயாரித்தலும் வெளியிடுதலும்.
 • தொழிற்றுறை தொடர்பான ஆய்வு கருத்தரங்கினை வருடாந்தம் ஒழுங்கமைத்தலும், ஆய்வுத் தகவல்களை சஞ்சிகையாக தொகுத்தலும்.
 • அமைச்சினதும், அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களதும் கருத்திட்ட முன்மொழிவுகளை கோரி, செயலுருவளித்து தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல்.
 • அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கான வருடாந்த முதலீடுகளின் மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
 • சீரிய வேலை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களை தொழிற்படுத்துதலும், முன்னேற்றங்களை மீளாய்தலும்.
 • அமைச்சினாலும், ஏனைய அமைச்சுகளாலும் / தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் சேவை / விசேட நிகழ்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்தல்.

தொடர்புகொள்வதற்கான தகவல்கள்,
திருமதி ரசிகா பெரேரா
பிரதிப் பணிப்பாளர்
தொலைபேசி / தொலைநகல்: +94 11-2369422
மின்னஞ்சல்: prdlabour@yahoo.com

நிதிப் பிரிவின் பிரதான தொழிற்பாடு, அரசாங்கத்தின் நிதி ஒழுங்கு விதிகளின் படி, மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவீனத்தின் கீழ் அரசாங்கத்தின்

வரவுசெலவுத்திட்டத்தினூடாக அமைச்சுக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிதி ஏற்பாடுகளை செலவுறுதல். கணக்குகளை பேணுதல் மற்றும் அத்தகைய கணக்குக் கூற்றுக்களை பொதுத் திறைசேரிக்கு சமர்ப்பித்தல் ஆகும்.
அமைச்சினதும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள நிறுவகங்களினதும் பதவியினரின் வேதனக் கொடுப்பனவு களை மேற்கொள்ளுதல் நிதிப் பிரிவின் பிறிதொரு பிரதான செயற்பாடாகும்.

தொடர்புகொள்வதற்கான தகவல்கள்,
திருமதி.ஜெ.ஏ.டீ.எஸ்.நிஷாமினி
பிரதம கணக்காளர்
தொலைபேசி/ தொலைநகல்: +94 11 2505161
மின்னஞ்சல்: ca@labourmin.gov.lk