கருத்திட்டங்கள்

சீரிய வேலை நிகழ்ச்சித்திட்டம்

 

சீரிய வேலை உள்நாட்டு நிகழ்ச்சித்திட்டமானது, தேசிய அபிவிருத்தி முயற்சிகளுக்குப் பங்களிப்புச் செய்வதற்கும், பரந்தளவிலான அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு விடயத்தினை மேம்படுத்துவதற்கும் சர்வதேச தொழில் தாபனத்தின் ஒருங்கிணைப்புக்கான கட்டுக்கோப் பொன்றை வழங்குகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டம், எவரும் விலக்கப்படமட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி, அனைவருக்கும் சீரிய வேலையை வழங்கக்கூடிய வேலையின் முன்னுரிமையளிக்கத்தகு விடயப் பரப்புகளினூடாக கொள்கை வழிகாட்டல், உபாயங்கள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை கோடிட்டுக் காட்டுகின்றது. சீரிய வேலை உள்நாட்டு நிகழ்ச்சித்திட்டமானது, தொழில் தருநர்கள், பணியாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களையும் பெறுகின்றது.

 

சீரிய வேலை உள்நாட்டு நிகழ்ச்சித்திட்டத்துக்கு யாப்பால் முன்னுரிமை யளிக்கப்பட்ட பணியின் பரப்பளவு, நாட்டின் மூன்று முன்னுரிமைகளைக் கொண்டிருப்பதுடன், இவை, நிலையான, பிரத்தியேகமான மற்றும் சீரிய தொழிலை உருவாக்குதல்; தொழில் சந்தையை சிறப்பாக ஆளுதல் மற்றும் அனைவருக்கும் வேலையில் உரிமை என்பவையாகும். இந்த நாட்டின் மூன்று முன்னுரிமைகள், நாட்டின் எட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் பெறுபேறுகளுடன் இணைந்திருக்கின்றது. அதிகமான தரவுகளையும், அறிவினையும் உருவாக்குதல், நாட்டின் மூன்று முன்னுரிமைகள் மற்றும் எட்டு பெறுபேறு களையும் அடைவதற்கு முதன்மையானதாக எடுக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், தற்போது, புதிய தேசிய அபிவிருத்திக் கொள்கைக் கட்டுக்கோப்பான ‘’சுபீட்சமான தொலைநோக்கு’’ மற்றும் ஏனைய துறை சார்ந்த கொள்கைகளைக் கவனத்திலெடுத்து, சீரிய வேலை உள்நாட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் இனங்காணப்பட்ட முன்னுரிமைகளை மீண்டும் பார்வையிடுவதற்கும், இந்த முன்னுரிமைகளை மீண்டும் சீரமைப்பதற்குமான செயல்முறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில் மற்றும் வேலையாளர்கள் மீது கோவிட்-19 நிலைமை ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றியும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.