புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

தனியார் துறைக்கும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான கலந்துரையாடல்களை தொழில் அமைச்சர் ஆரம்பிக்கின்றார்

ஊடகங்கள்

அரச துறை பணியாளர்கள் அனைவரு க்கும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக நிதி அமைச்சர் திரு பசில் ராஜபக்க்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை தொடர்ந்து தனியார் துறை பணியாளர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா  அவர்கள் தெரிவிக்கின்றார்.

 

நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம், தனியார் துறை பணியாளர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தொழில்தருநர்களுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தொழில் அமைச்சருக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கிணங்க, தனியார் துறையின் தொழில்தருர்களுடன் உடனடியாக கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

அரச துறை  பணியாளர்களாலும், அதேபோன்று தனியார் துறை பணியாளர்களாலும் வாழ்க்கைச் செலவுச் சுமை சமமாக உணரப்படுகின்றமையால், நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்ற  தனியார் துறை பணியாளர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவை கட்டாயமாக வழங்குதல் வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான முதலாவது சுற்று கலந்துரையாடல் இம்மாதம் 07, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் தொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவு ள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

ஆடைத் துறை, பெருந்தோட்டத் துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற  தொழில்தருநர்கள் அத்துடன்,  கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டத்தினால் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த தொழில்தருநர்கள் ஆகியோர் தமது பணியாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக சுமூகமான சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் தொழில் அமைச்சின் செயலாளர் திரு.எம்.பி.டி.யு.கே. மாபா பத்திரண, தொழில் ஆணையாளர் அதிபதி.திரு.பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தின் சிரேஷ்ட  அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply