புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

2022 ஆம் ஆண்டிற்கான கடமைகளைத் தொடங்குதல்

ஊடகங்கள்

விவசாயிகள், அரச  அலுவலர்கள் மற்றும் தனியார் துறையில் உள்ள அனைவருக்கும் இன்று பொருளாதாரப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அந்த பொருளாதார நெருக்கடி நமது நாட்டின் திறைசேரியையும் பாதித்துள்ளது. இக்கேள்விக்கு குறுகிய மாற்று வழிகள் எதுவுமில்லை.​ நாடொன்றாக, தேசமொன்றாக நாம் எதிர்கொள்கின்ற நிலைமையிலிருந்து  வெளியே வருவதற்கு  இத்தருணத்தில் நாம் அனைவரும் சிறந்த பங்கினை வகித்தல் வேண்டும்.​எனவே நாம் ஒரு புதிய வழியில் வாழ பழகிக்கொள்ளுதல் வேண்டும். கௌரவ தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள், உற்பத்தித்திறன் என்ற எண்ணக்கருவே இந்த இக்கட்டான நேரத்தில் நாம் கொண்டுள்ள மிகச் சிறந்த தீர்வாகும் என்று தெரிவிக்கின்றார்.

 

2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்து தொழில் அமைச்சில் இடம்பெற்ற மத வைபவங்களின் பின்னர் இன்று (3) தொழில் அமைச்சில் இடம்பெற்ற பதவியினரின் ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.

 

மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்த நிலைமையை அரசியல் ரீதியாக விமர்சிக்கின்ற எதிர்க்கட்சியின் பொதுக் கொள்கைமற்றும் அதிலிருந்து அரசியல் ஆதாயம் பெறுகின்ற சிலரால் நடவடிக்கை எடுக்கப்படுதல் போன்றவற்றை நாம் குற்றம் சாட்ட முடியாது என்று தெரிவித்திருந்தார். ஆனால், இந்த தேசிய பிரச்சினைக்கு நீண்டகால தீர்வொன்றைக் காண்பதற்கு நாம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். தொழிற்சங்கங்கள், தொழில்தருநர்கள் மற்றும் தொழில் அமைச்சு ஆகியவை தனியார் துறையில் சம்பளங்களை அதிகரிப்பதற்கான தொழிற்சங்கத்தின் முன்மொழிவு பற்றி தற்போது கலந்தரையாடிக் கொண்டிருக்கின்றன.

 

புலம்பெயர்  வேலையாட்களுக்கான காப்புறுதி ஏப்பிரல் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எமது நாட்டின் வேலையாட்கள் தொடர்பான சட்டக் கட்டமைப்பு தற்போது நவீன காலத்திற்கு பொருந்தும் வகையில் சீராக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அது வேலையாட்களுக்கு எதுவித தீங்கினையும் ஏற்படுத்தாது.

 

இந்த அரசாங்கம் அகற்றப்பட்டாலும், பிறிதொரு அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் டொலர்கள் திறைசேரிக்கு வரப்போவதில்லை. இந்த அரசாங்கம் பணத்தைப் பெறுவதில்லை.

 

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை வகுத்மைத்து, நடைமிறைப்படுத்துவதற்கு நாம் பலமளித்தல் வேண்டும்.

Leave a Reply