புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

புதிய செயலாளர் கடமையைப் பொறுப்பேற்றல்

இலங்கை நிருவாக சேவையின் விசேட தர அலுவலகரான திரு.ஆர்.பி.ஏ.விமலவீர அவர்கள், 2022 மே 25 ஆம் திகதி தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் புதிய செயலாளராக கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்​.  திரு. ஆர்.பி.ஏ. விமலவீர அவர்கள், தனது முன்னைய தொழில்சார் வாழ்க்கையில் தொழில் ஆணையாளர் அதிபதி உள்ளடங்கலாக, தொழில் அமைச்சிலும், தொழில் திணைக்களத்திலும் பல பதவிகளிலும் மற்றும் பல்வேறு அமைச்சுக்களில் மேலதிக செயலாளர் என்ற பதவியிலும் சேவையாற்றி யுள்ளமையால், இவர் தொழில் துறையில் தேர்ச்சி  பெற்ற ஒருவராவார்.

 

திரு.ஆர்.பி.ஏ.விமலவீர அவர்கள் 1998 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்திருந்தார். பொருளாதாரத்தில் விசேட பட்ட​தையும் (களனி பல்கலைக்கழகம்), பொருளியலில் முதுகலைமாணிப் பட்டத்தையும் (கொழும்புப் பல்கலைக்கழகம்), அத்துடன் மனிதவள திட்டமிடல் மற்றும் அபிவிருத்தியில் முதுகலைமாணிப் பட்டத்தையும் (புதுடில்லி) கொண்டிருக்கின்றார். தொழில் துறையில் அவரது தொழில்சார் வாழ்க்கையின் போது, சர்வதேச உறவுகளில் அபரீதமான ஈடுபாடு காரணமாக சர்வதேச தொழில் செயலமர்வுகள் / நிகழ்ச்சித் திட்டங்களுக்கு வளஆளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், அவர் தொழில் துறையில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருப்பதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் வருகைதரும் விரிவுரையாளராகவும் சேவையாற்றி வருகின்றார்.

Leave a Reply