புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

மலேசிய வேலைசார்ந்த பயிற்சி நிலையமொன்றைத் தாபிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல்.

இலங்கையில் இயலுமானவரையில் விரைவாக மலேசிய வேலைசார்ந்த விசேட நிலையமொன்றைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

மலேசிய தொழில்வாய்ப்பினை இலக்குவைத்து விசேட பயிற்சி நிலையமொன்றைத் தாபிப்பதனை விரைவுபடுத்துவதற்கான தேவை பற்றி தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்களுக்கும், இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் திரு.ரங் யங் ரைய் அவர்களுக்குமிடையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் 2022 மே 29 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

 

 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மலேசிய பயிற்சி நிலையமொன்றைத் தாபிப்பதற்காக 2016 ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டிருந்தார். இந்த உடன்படிக்கையை மீளக்கவனத்திலெடுப்பதற்கும், இயலுமானவரையில் விரைவாக பயிற்சி நிலையமொன்றை நிறுவுவதற்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு கௌரவ அமைச்சரும், உயர் ஸ்தானிகரும் இணங்கியிருந்தனர்.

 

 

கொறோனா தொற்றுநோயின் பின்னர், புலம்பெயர் பணியாளர்களுக்கான கதவு மலேசியாவினால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மலேசிய உயர் ஸ்தானிகர் தெரிவித்திருந்ததுடன், இலங்கை பணியாளர்களுக்கு அதிகமான தொழில்வாய்ப்பினை வழங்குமாறு கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கியுமிருந்தார்.  உற்பத்தித் துறையிலுள்ள வேலைகளுக்கு அதிகமான பணியாளர்களை அனுப்புதல் மற்றும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற மலேசிய பயிற்சி நிலையத்தினூடாக அவர்களுக்கு விசேட பயிற்சியை வழங்குதல் என்பவற்றின் மீது  கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

 

 

மலேசிய பணியாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த குறைந்தபட்ச சம்பளத்தை இலங்கை புலம்பெயர் பணியாளர்களின் தொழில் ஒப்பந்தங்களில் உள்ளடக்கப்பட முடியுமென்றும் மலேசிய உயர் ஸ்தானிகர் அமைச்சருக்குத் தெரிவித்திருந்தார்.

 

இலங்கை தொழில் திணைக்களத்திற்கும், மலேசிய உயர் ஸ்தானிகராலயத்திற்குமிடையில் நெருக்கமான உறவினைப் பேணவேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார அவர்கள் வலியுறுத்தியிருந்தார்.