சர்வதேச தொழில் தாபனத்தின் இந்நாட்டின் பணிப்பாளர் சிம்ரின் சிங் அவர்கள்
சர்வதேச தொழில் தாபனத்தின் இந்நாட்டின் பணிப்பாளர் சிம்ரின் சிங் அவர்கள், சர்வதேச தொழில் தாபனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார அவர்களை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் சந்தித்திருந்தார்.
சர்வதேச தொழில் தாபனம், தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், தொழில்முயற்சிசார் திறன்களை விருத்திசெய்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்று விடயப்பரப்புகளில் முக்கிய பங்களிப்பினை வழங்குகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் நலன் அத்துடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளில் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அவர் கவனம் செலுத்தியிருந்தார்.
நாட்டின் தொழில் அணியில் மிகவும் தேவையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு எதிர்காலத்தில் சர்வதேச தொழில் தாபனத்துடன் ஒத்துழைப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். சர்வதேச தொழில் தாபனம், தொழிலாளர் பற்றிய நாடளாவியரீதியில் தரவுகளை அணுகுவதற்கான கட்டுப்பாடு பற்றிய பிரச்சினையை எழுப்பியுள்ளது. நாட்டின் தொழிலாளர் தொகுப்பில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சர்வதேச தொழில் தாபனம் நெருக்கமாக பணியாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.