விசேட செயற்பாடுகள்

கௌரவ தொழில் அமைச்சரின் தலைமையில் முத்தரப்பு செயலணி யொன்று சமுகக் கலந்துரையாடல் பெறிமுறையினை, தேசிய தொழில் ஆலோசனை சபையினை  இணைத்து உப குழுவொன்றாக கோவிட்-19  ஆரம்பத்துடன் மார்ச் 10 ஆம் திகதி தாபிக்கப்பட்டிருந்தது. இந்த செயலணியின் நோக்கம், வேலையாட்களில் மற்றும் வர்த்தகங்களில் கோவிட-19 இன் தாக்கத்தைக் குறைப்பதற்குரிய முற்செயற்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதாகும். இந்த குழு, ஊரடங்கு காலப் பகுதியிலும் கிரமமாக சந்தித்திருந்ததுடன், அக்கறைதாரர்களிடையே சிறந்த புரிந்துணர்வினை ஏற்படுத்த முடிந்துமிருந்தது.

செப்ரெம்பர் மாதம் வரை பதினாறு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சந்திப்பு அக்கறைதாரர்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு பாரியளவில் உதவியுள்ளது. கோவிட்-19 பரவல் காரணமாக வேலை வழங்க முடியாத பணியாளர்களுக்கான வேதனக் கொடுப்பனவு தொடர்பாக செயலணிக் கூட்டங்களில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 

  • கோவிட்- 19 தொற்று காரணமாக தொழில் இடைநிறுத்தப் பட்டுள்ள நிறுவனங்களின் பணியாளர்களைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளுதல்.

 

  • சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் மற்றும் சமூக இடைவௌியைப் பேணுவதற்கான தேவைப்பாடு காரணமாக அனைத்து பணியாளர்களையும் வேலைக்கு அழைக்க முடியாத நிறுவனங்களில், அனைத்துப் பணியாளர்களுக்கும் விகிதாசார ரீதியல் வேலை வழங்குவதனை உறுதிப்படுத்தும் வகையில் சுழற்சி முறையொன்றினை அல்லது பிற வேறு பொருத்தமான பொறிமுறையொன்றினை நடைமுறைப்படுத்துதல்.

 

  • போதியளவு வேலையின்மை காரணமாக 2020 மே, யூன், யூலை, ஓகஸ்ட் மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் வீடுகளில் தங்குமாறு கேட்கப்பட்டிருந்த பணியாளர்களுக்கு, அவர்களுக்கு இறுதியாக செலுத்தப்பட்டிருந்த அடிப்படை வேதனத்தில் 50% அல்லது 14,500/= ரூபா தொகையினை, எது பணியாளர்களுக்கு சாதகமாக அமைகின்றதோ அதனை மாதாந்த வேதனமாகச் செலுத்துதல். இது தொடர்பில், ஊழியர் சேமலாப நிதிய மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய உதவுதொகைகளைச் செலுத்துதல் அவசியமானதாகும்.