தேசிய தொழில் ஆலோசனைச் சபையானது, முத்தரப்பு ஆலோசனை சமவாயத்தை ஏற்று அங்கீகரித்ததனைத் தொடர்ந்து, சமூக,தொழில் கொள்கைகள் மற்றும் சர்வதேச தொழில் நியமங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி தேசிய மட்டத்தில் அரசாங்கம், வேலையாட்களின் தாபனங்கள் மற்றும் தொழில்தருநர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும், அவர்களுக்கிடையில் கூட்டுறவினை ஏற்படுத்துவதற்குமாக 1994 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட தேசிய முத்தரப்பு பொறிமுறையொன்றாகும். தொழில் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் இச்சபையின் தவிசாளராவார். தேசிய தொழில் ஆலோசனைச் சபையானது, அது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வெற்றிகரமாக தொழிற்பட்டு வருவதுடன், நாட்டில் தொழில்துறையைப் பேணுவதற்கு உதவுகின்றது. தொழில் கொள்கைகளில் தேசிய தொழில் ஆலோசனை சபையின் எண்ணக்கருத்து பல கூட்டங்களில் அதிகளவு மதிக்கப்பட்டிருந்ததுடன், கொள்கை ஆக்கல் செயல்முறைகளில் உரிய கவனம் வழங்கப்படுகின்றது.