தொழிற்றுறை உறவுகள்

நாட்டில் தொழிற்றுறை அமைதியைப் பேணுவதற்கு கூட்டு ஒப்பந்தங்கள் நன்மைபயக்கின்றன. தொழிற்றுறை பிணக்குகளைத் தீர்ப்பதில் இந்த கூட்டு ஒப்பந்தங்கள், தொழில்தருநர்கள் மற்றும் பணியாளர்கள் இருவருக்கும் அதிகளவில் நிரந்தர தீர்வுகளை வழங்குகின்றது.

2019.12.31 இல் வலுவிலுள்ள கூட்டு ஒப்பந்தங்களின் மொத்த எண்ணுக்கை – 133
2020.09.30 இல் வலுவிலுள்ள கூட்டு ஒப்பந்தங்களின் மொத்த எண்ணுக்கை – 148

நடுத்தீர்ப்பு மற்றும் கைத்தொழில் நீதிமன்றத்தின் பிரதான குறிக்கோள், தொழிற்றுறை பிணக்குகளை தீர்த்துவைப்பதாகும் என்பதுடன், இதன்படி, பிணக்குகள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் தேவையான தீர்ப்புகள் நடுத்தீர்ப்பாளர் ஒருவரால் அல்லது கைத்தொழில் நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்றன. தொழில் திணைக்களத்தின் கைத்தொழில் உறவுகள் பிரிவின் அல்லது தொழில் அலுவலர்களின் செயற்பாடுகளால் தீர்க்கப்படாத பிணக்குகள், நடுத்தீர்ப்பு அல்லது கைத்தொழில் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுகின்றன 2020 ஆம் ஆண்டில்,

 

கட்டாய நடுத்தீர்ப்புக்காக அனுப்பப்பட்டவற்றின் எண்ணிக்கை – 55
வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளின் எண்ணிக்கை – 22

தனியார் துறையில் பணிபுரிகின்ற பணியாளர்களது சேமநலனையும் தொழில் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் நோக்கில் கொள்கைகளையும், வேலையின் நியமங்களையும் நிபந்தனைகளையும் வகுத்தமைத்தல், அவற்றிலுள்ளவற்றுக்கு சட்ட வலுவளித்தல் போன்றவை தொழில் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளாகும். இதன்படி, பின்வரும் செயற்பாடுகள் 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நியதிச்சட்ட ஏற்பாடுகளை மீறியமை மற்றும் தொழிற்றுறை பிணைக்குகளைத் தீர்த்தல் பற்றிய முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்குதல்.

நியதிச் சட்டங்களை மீறியமை, தொழில் துறை அமைதியை வேண்டு மென்றே குலைத்தமை மற்றும் பணிப் பகிஷ்கரிப்புக்கான சாத்தியம் தொடர்பாக தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில், மாவட்ட அலுவலகங்களில் மற்றும் உப அலுவலகங்களில் பணியாளர் களால் மற்றும் ஏனைய பல்வேறு தரப்புகளால் முறைப்பாடுகள் செய்யப்படுவதுடன், அத்தகைய முறைப்பாடுகளைத் தீர்ப்பதற்கு உரிய அலுவலகங்களால் நடவடிக்கை  எடுக்கப்படுகின்றது. அவர்களது முயற்சி தேல்வியடைந்தால், இந்தப் பிணக்கு, இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் கட்டளையின் பேரில், தீர்வுக்காக நடுத்தீர்ப்பாளர் அல்லது கைத்தொழில் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படு கின்றது. கோவிட்-19 காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் 2020 ஏப்பிரல் முதல் செப்ரெம்பர் வரை தீர்க்கப்பட்ட முறைப்பாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.