ஊழியர் சேமலாப நிதியம்

ஊழியர் சேமலாப நிதியமனது, இலங்கை தனியார் றை மற்றும் பகுதியளவிலான அரச துறை பணியாளர்களின் பாதுகாப்பான ஓய்வூதிய காலத்தை உறுதிப்படுத்துவதற்காக 1957 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கச் சட்டத்தினால் தாபிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் நிதி முகாமைத்துவம் மத்திய வங்கியினால் ஆற்றப்படுகையில், நிருவாகம் தொழில் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்றது. ஊழியர் சேமலாப நிதியத்தில் வேலைத்தலங்களைப் பதிவுசெய்தல், ஒறுப்பினர்களைப் பதிவு செய்தல், ஊ.சே.நிதிக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளுதல், அனுமதிக்கப்பட்ட சேமலாப நிதியங்களை கண்காணித்தல் மற்றும் ஊ.சே.நிதியத்தை மேம்படுத்துதல் போன்றவை தொழில் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.