சட்டங்களுக்கான திருத்தங்கள்

1.   1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டம்.

 

  • நீதவான் நீதிமன்றங்களின் நியாயாதிக்கங்களின் கீழுள்ள செலுத்தப்படாத கொடுப்பனவுகளை அறவிடுவதற்கு தொழில் நியாய சபைகளுக்கு வலுவளித்தல்.

 

  • தொழிலுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவுசெய்வதற்குத் தேவைப்படுகின்ற கட்டளைகளை ஆக்குதல்.

 

  • ஊழியர் சேமலாப நிதிய உதவுதொகைகள் செலுத்தப்படுவது பற்றி கையடக்கத் தொலைபேசி குறுஞ் செய்தி ஊடாக உறுப்பினர்களுக்கு அறிவித்தல்.

 

  • ஊழியர் சேமலாப நிதியத்தின் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தல்.

 

  • வௌிநாட்டில் தொழில் புரிகின்ற, இலங்கையில் உதவு தொகைகளைச் செலுத்துகின்ற இலங்கை பணியாளர்கள், அந்தந்த நாடுகளின் சமூகப் பாதுகாப்பு உதவுதொகைகளைச் செலுத்துவதிலிருந்து விலக்களித்தல்.

 

 

2. நியதிச்சட்ட நிலுவைகளை அறவிடுவதற்கான தத்துவத்தை தொழில் நியாயசபைகளுக்கு மாற்றுதல்.

 

3. 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம்.

 

  • தொழில்தருநர்களால் நியாயமற்ற விதத்தில் சேவையிலிருந்து நீக்கப்படுவதை சவாலுக்குட்படுத்தி தொழில் நியாய சபைகளில் வேலையாட்களால் வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்தில், வேலையாட்கள் சார்பாக சட்டத்தரணிகள் அல்லாத பிரதிநிதிகள் ஆஜராவதற்கு அதிகாரம் வழங்குதல்.

 

  • நியாயமற்ற வகையில் நீக்கப்பட்ட வேலையாட்கள் தொடர்பில், தொழில் நியாய சபைகளால் கட்டளைகளை நடைமுறைப் படுத்துவதற்கான அதிகாரத்தை தொழில் நியாய சபைகளுக்கு வழங்குதல்.

 

  • தவறான நடத்தைக்காக தொழில்தருநர்களால் பணி நீக்கம் செய்யப்பட்ட அல்லது ஏனைய வடிவிலான ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணியாளர் களுக்கு எதிராக எடுக்கப்படுகின்ற இறுதி ஒழுக்காற்று நடவடிக்கைக்கு கால வரையறையை விதித்துரைத்தல்.

 

4.      தொழில் பிணக்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு தொழில் நியாய சபைக்கும், நீதவான் நீதிமன்றங்களுக்கும் ஒத்த நீதித் தத்துவங்களை வழங்குவதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துதல்.

 

5. பணி புரிகையில் அல்லது தொழிலின் நிமித்தம் வேலையாளர் ஒருவருக்குச் செலுத்தப்பட்ட ஆகக்கூடிய நட்டஈட்டை 550,000/- ரூபாவிலிருந்து 2 மில்லியன் ரூபா வரை அதிகரித்தல்.

 

6. தனியார் துறைப் பணியாளர்களின் ஆகக்குறைந்த வேதனத்தை 10,000/= ரூபாவிலிருந்து 12,500/= ரூபாவாக அதிகரித்தல்.

 

7. 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளம் நபர்கள் மற்றும் சிறுவரை தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் கீழ், 50 தொழில்கள் ஆபத்தான தொழில்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், இந்தப் பட்டியல் திருத்தப்பட்டு மேலும் 30 தொழில்கள் இதற்குள் சேர்க்கப்படவுள்ளன.

 

8. கடைகள் மற்றும் அலுவலக சட்டத்தைத் திருத்துவதன் மூலம் வேலையாட்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற அதேவேளை (விசேடமாக சர்வதேசரீதியில் இயக்கப்படுகின்ற தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான அறிவு செயல்முறை வௌிவயங்களிடல் மற்றும் வியாபரச் செயல்முறைகள் போன்ற துறைகளில் ஈடுபடுகின்ற பெண் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்) உரிய சேவை நிபந்தனைகளை நெகிழ்வுப் போக்குள்ளதாக்குதல்.

 

9. புதிய தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரி சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்.

 

10. கட்டாய கல்வி வயது 16 என்பதுடன் ஒத்துப் போகும் வகையில் தொழில் புரிவதற்கான ஆகக்குறைந்த வயதினை 16 என்பதாக தொழில் சட்டவாக்கத்தில் அதிகரித்தல்.

 

11. சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதிலுள்ள முரண்பாடுகளையும் சிக்கல்களையும் நீக்கும் மற்றும் அவற்றை இலகுபடுத்தும் அத்துடன், வேலையாட்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும், நலன்புரியினை அதிகரிக்கும் நோக்கில் அனைத்து சேவை நிபந்தனைகளையும் கூட்டிணைத்து தனித் தொழில் சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்.
12. வீட்டு வேலையாட்களுக்கு சமூகப் பாதுகாப்பு அனுகூலங்களை விரிவுபடுத்துவதற்காக தொழில் சட்டங்களுக்குள் அவர்களையும் உள்ளடக்குதல்.

 

13. பாரம்பரிய சேவை வழங்கல் முறைக்கு அப்பால் சென்று சேவைநாடுநர்களுக்கு அதிக வினைத்திறனுள்ள சேவைக்கான ஏற்பாடுகளுக்குரிய நவீன டிஜிற்ரல் தொழில்நுட்பங்களைக் கைக்கொள்ளுதல்.

 

14. சர்வதேச நியமங்களின்படி ஓய்வூதிய வயதினைத் தீர்மானிக்கின்ற முறைமையை அறிமுகப்படுத்துதல்.