தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட விபத்துக்களுக்காக வேலையாளருக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவினை வழங்குவதற்காக 1934 ஆம் அண்டின் 19 ஆம் இலக்க வேலையாளர் நட்டஈட்டுக் கட்டளைச்சட்டம் சட்டமாக்கப்பட்டிருந்தது. இந்த மூலச் சட்டம் பல தடவைகள் திருத்தப்பட்டிருந்ததுடன், இறுதித் திருத்தம், 2005 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கச் சட்டத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. வேலையாளர் நட்டஈட்டு நீதிமன்றம், மாவட்ட நீதிபதியினதும், நீதவான் நீதிபதியினதும் தத்துவங்களுடன், நாடாளாவியரீதியில் 14 சுற்று நீதிமன்றங்களைக் கொண்டிருக்கின்றது.
இந்த அலுவலகத்தின் முக்கிய குறிக்கோள், தொழிலிலன் நிமித்தம் ஏற்பட்ட காயங்களால் துன்பப்படுகின்ற, தொழிலின் தன்மையால் ஏற்பட்ட நோயினால் துயரப்படுகின்ற வேலையாளர் களுக்கு மற்றும் வேலைத்தலங்களில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக இறக்கின்ற வேரையாளர்களில் தங்கியிருக்கின்றவர்களுக்கு செலுத்த வேண்டிய நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதாகும்.