தொழில் திணைக்களமானது, இந்திய குடிபெயர் தொழிலாளர்களின் நலன்புரிச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஆரம்பத்தில் தாபிக்கப்பட்டிருந்ததுடன், இந்திய குடிபெயர் தொழில் திணைக்களம் என்றழைக்கப்பட்டிருந்தது. 1923 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இந்திய குடிபெயர் தொழில் கட்டளைச்சட்டத்தினை வலுப்படுத்தியமையானது இந்திய குடிபெயர் தொழில் திணைக்களத்தின் தாபனத்தை ஏற்படுத்தியிருந்தது.
எவ்வாறாயினும், தொழில் அணியின் சுதேச பிரிவுகள் படிப்படியாக விரிவாக்கப்பட்டிருந்ததுடன்,விடாமுயற்சியுடனான உழைப்பு கணக்கெடுக்கத் தக்க சக்தியொன்றாக வந்திருந்தது. இச்சந்தர்ப்பத்தில், காலனித்துவ ஆட்சியாளர், இந்திய குடிபெயர் தொழிலாளர்களின் நலன்புரிச் செயற்பாட்டினை மேற்கொள்வதற்காக வரையறுக்கப்பட்ட அவர்களது எல்லைக்கப்பால் பார்க்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியிருந்தனர். அனைத்து வேலையாட்களின் நலன்புரியினையும், நலனுக்கான நடவடிக்கை களையும் எடுக்க வேண்டியிருந்தது. இதன்படி, இந்திய குடிபெயர் தொழில் திணைக்களமானது, 1931 ஆம் ஆண்டில் பொதுத் திணைக்களமாக இந்திய குடிபெயர் தொழிலாளர்கள் அதேபோன்று பாரம்பரிய தொழிலாளர்கள் என இருவரது நலன்புரிச் செயற்பட்டினையும் உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பிற்குரிய அரச முகவர் என்ற நிலைக்கு மாற்றப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் திணைக்களத்தில் தலைவர் தொழில் கட்டுப்பாட்டாளராக பதவிப்பெயரிடப்பட்டிருந்தார், ஆனால், 1944 ஆம் ஆண்டில் தலைவர், தொழில் ஆணையாளராவும், 2000 ஆம் ஆண்டில் தொழில் ஆணையார் அதிபதியாகவும் பதவிப்பெயர் இடப்பட்டிருந்தார்.
எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியாக தொழிலாளரின் பாதுகாப்பிற்கும் நலன்புரிக்குமாக செயற்பாடுகள் பரந்துபட்ட பரப்பளவான செயற்பாடுகளை உள்ளடக்கி நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டளைச் சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அடிப்படையில், இவற்றினை நடைமுறைப் படுத்துவது திணைக்களத்தின் பணி இலக்காக இருந்திருந்தது. இதற்கு மேலதிகமாக, இத்திணைக்களம், வேலையாளரின் கல்வி, மனிதவளங்களைப் பணிக்கமர்த்துதல், தொழில் சந்தைத் தகவல்கள், சமூகக் கலந்துரையாடல் கள் மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் வேலை வாழ்க்கைத் தரம் போன்றவற்றின் முறைப்பாடுகளைக் கண்காணித்தல் போன்ற அத்தகயை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
பல்வேறு சேவைகளுக்காக, மேலதிக நேரத்திற்காக அதிகரித்துவரும் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில், இத்திணைக்களத்தின் பதவியினரும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பதவியினரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேற்பட்டதாகும். இந்நிறுவகத்தின் நிருவாகம் பல்வேறு தொழிற்பாடுகள் உரித்தளிக்கப்பட்டுள்ள 17 பிரிவுகளை தலைமை அலுவலகத்தில் கொண்டிருப்பதுடன், பிராந்திய மட்டத்தில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு 11 வலய பிரதி ஆணையாளர்கள் அலுவலகங்கள், 36 மாவட்ட தொழில் அலுவலகங்கள், 12 உபதொழில் அலுவலகங்கள், 9 மாவட்ட தொழிற்சாலை பரிசோதனை பொறியிலாளர் அலுவலகங்களைக் கொண்ட வலையமைப்பொன்றினையும் கொண்டிருக்கின்றது.