நிருவாகம் மற்றும் தாபனங்கள் பிரிவானது, நிருவாக அலகு, தாபன அலகு மற்றும் ஊடக அலகு என்ற மூன்று அலகுகளைக் கொண்டிருக்கின்றது.
நிருவாக அலகிற்கு, பொது நிருவாகம், பெறுகைச் செயற்பாடுகள், முகாமைத்துவம், பொதுப் பராமரிப்பு, பயிற்சியளித்தல் மற்றும் அமைச்சினதும், அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களதும் அபிவிருத்தி போன்ற அத்தகைய விடயங்கள் பற்றிய பாரிய பொறுப்பு உரித்தளிக்கப்படு கின்றது. தாபன அலகானது, அமைச்சினதும், கௌரவ தொழில் அமைச்சரது அலுவலகத்தினதும் மனித வள முகாமைத்துவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கின்றது. அத்துடன், இந்த அலகானது, பாராளுமன்ற வினாக்கள், பொது மேன்முறையீட்டுக் குழு, ஆலோசனைக் குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெவ்வேறு வேண்டுகோள்கள் தொடர்பில் பொது மக்களால் அனுப்பப்படுகின்ற பல்வேறுபட்ட கடிதங்கள் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பு வாய்ந்ததாகும். ஊடக அலகானது, இந்த அமைச்சினாலும், அமைச்சின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற நிறுவனங்களாலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றப்பட்டுள்ள முக்கியமான செயற்பாடுகள் பற்றி பொது மக்களுக்கும், ஊடாக நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்துவதற்கு பொறுப்புவாய்ந்ததாகும்.